Marketing Information
சந்தை விவரங்கள்
About Channel Partners
We are supplying cement to Dealer Community and Government Departments.
Which are all the Government Departments we are supplying?
We are supplying to DRDA, SIPCOT, PWD, TNPHC, Education Department, TNEB, CO-OP-Department, Panchayat Union, Town Panchayats,THADCO, Forest and Environment,TNSTC, TNCSC and Other Central Government Undertaking i.e., NLC, BHEL, Salem Steel Plant, etc.
Business Boundary
At Present, We create an opportunity to our stakeholders by realizing a greater return on their investments, and it will create bigger Dealers driven Community by achieving 1600 Active Point of Sales across districts of Tamilnadu. We have a goal of serving other neighboring states of Tamilnadu i.e. Kerala.
Multi Branding Strategy
TANCEM has to serve our stake holders with Various Product Categories to full fill their needs and wants we have good product suit to match their requirements, at present we have only two Categories in our Product Basket.
Existing Product of TANCEM
- Arasu PPC
- Arasu OPC – 43 Grade
Premium brand – "Valimai"
- Valimai PPC
- Valimai OPC
பங்குதாரர்களின் விவரங்கள்:
டான்செம் நிறுவனமானது, டான்செம் முகவர்கள் மற்றும் அரசுத்துறைகளுக்கு சிமெண்ட் விநியோகம் செய்து வருகிறது.
டான்செம் மூலம் சிமெண்ட் விநியோகிக்கப்படும் அரசுத்துறைகள்:
DRDA, SIPCOT, PWD, TNPHC, TNSTC, TNCSC, THADCO, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மத்திய அரசு நிறுவனங்களான NLC, BHEL, சேலம் எஃகு ஆலை ஆகிய நிறுவனங்களுக்கு டான்செம் சிமெண்ட் விநியோகம் செய்து வருகிறது.
முகவர்களை நியமித்தல்:
தற்போது, டான்செம் நிறுவனமானது தனது முக்கிய முகவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதால், அவர்களது முதலீட்டின் பலன் உயர்ந்துள்ளது. மேலும், இதன் மூலம் 1600 துணை முகவர்களுக்கும் புதிதாக டான்செம் முகவர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் சிமெண்ட் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சிமெண்டை விநியோகம் செய்து தனது விற்பனையை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
டான்செம் - அமைப்பு:
டான்செம் நிறுவனமானது முக்கிய முகவர்களையும் சில்லரை விற்பனையாளர்களையும் கொண்டு அரசு சிமெண்டை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் முக்கிய மையமாக திகழ்கிறது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் டான்செம் நிறுவனத்தின் வலுவான கால்தடங்களை பதிக்க உதவுகிறது. மேலும், கிராமப்புறம், நகர்ப்புறம் போன்ற அனைத்து பகுதிகளின் இறுதிபயனாளர்களை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கான வலுவான கூட்டமைப்பினை டான்செம் நிறுவனமானது உருவாக்கியுள்ளது.
வெவ்வேறு வகையான சிமெண்ட் வகைகள்:
டான்செம் தங்கள் முகவர்களுக்கு அவர்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு வகையான சிமெண்ட் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி சேவை செய்து வருகிறது. அதன்படி, டான்செம் நிறுவனம் இரண்டு வகையான சிமெண்ட் தயாரிப்புகளை கொண்டுள்ளது. அவை,
1. டான்செம் - அரசு பிராண்ட் PPC மற்றும் OPC 43 Grade சிமெண்ட் மட்டுமே இதுவரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2. தற்பொழுது வலிமை என்ற உயர்தர புதிய வகை சிமெண்டானது PPC மற்றும் OPC 43 Grade வகைகள் சந்தையில் விற்பனை துவக்கப்பட்டுள்ளது.