Frequently Asked Questions

  • 1)What is Cement?

    Cement is a hydraulic binder and a finely ground inorganic material consisting of silicates and aluminates of calcium. When mixed with water, it forms a pasts which sets and hardens by means of hydraulic reaction.

  • 2)What are the raw materials used to manufacture Cement?

    Limestone, Clay, Iron Ore and Gypsum

  • 3)How is cement manufactured?

    Cement-grade limestone is crushed into small sizes (Less than 75 mm) in Limestone Crusher. Crushed Limestone is ground into fine powder in Raw Mill, which is called Raw meal. Raw meal is fed into inlet of Rotary Kiln. The pulverized fine coal from Coal Mill is injected into outlet of the Kiln and burned. At 1400 °C, Clinkerisation takes place. The clinker coming out of the Kiln along with gypsum and fly ash at proportionate ratio are ground into fine powder in Cement Mill is called cement.

  • 4)What is clinker?

    Clinker is a granular substance of spherical pellets of diameter 3 to 25 mm obtained by fusing cement-grade Limestone at 1400°C temperature. It is an intermediate product in the manufacturing of cement.

  • 5)What is the function of the Gypsum?

    Gypsum functions as an agent which controls the setting time of cement.

  • 6)What are the types of cement available in the market?

    The commonly available types of cement are Portland Pozzolana Cement (PPC), Ordinary Portland Cement (OPC)-43 Grade and Ordinary Portland Cement (OPC)-53 Grade.

  • 7)What is setting of Cement?

    The setting is the stiffening of the cement paste which broadly refers to the changing from its fluid state to a rigid one.

  • 8)What is hardening of Cement ?

    Hardening is the process of gaining strength of a set cement paste.

  • 9)What are the reasons for slow setting and quick setting of cement for concrete?

    Slow setting is due to:

    • Salts and chemicals in water, sand and aggregate.
    • Applications of less cement mortar/ concrete.
    • Cold weather conditions.
    • The high percentage of impurities seen usually in adulterated cement.
    • Higher water to cement ratio.

    Quick setting is due to :

    • Addition of low quantity of gypsum.
    • Hot weather conditions.
    • High cement fineness.

  • 10)Why is water used for concrete?

    With water the cement undergoes the process of hydration to form a gel with the binding property that covers the aggregates uniformly when mixed. However, water should be added proportionally for the required consistency since excess water is deterrent to concrete.

  • 11)Can any type of water be used for concrete?

    Water used in concrete must be free from impurities and generally, potable quality is considered best. Bore water needs to be checked before being used because it often contains impurities that affect setting time and reduces the strength of concrete. Sea water is not suitable for reinforced concrete as it causes corrosion.

  • 12)What is Water-Cement ratio?

    The quantity of water used for mixing the concrete per unit volume related to the quantity of cement is called the water cement ratio.

  • 13)What is Curing?

    Curing is responsible for hardening of cement. The most common method of curing is pouring or showering of water over the concrete

  • 14)What are the common mistakes that affect the quality of concrete?

    • Usage of too much or too little water for mixing
    • Improper mixing of aggregate with cement
    • Inadequate compaction of concrete.
    • Placing concrete on a dry foundation without properly wetting it with water.
    • Usage of water containing solids, chemicals, etc.,
    • Leaving the finished concrete surface exposed to the sun and wind during the first ten days after placing without curing.

  • 15)Does the Cement color affect the quality?

    Color does not have any effect on cement properties.

  • 16)What is PPC Cement?

    PPC (Portland Pozzolana Cement) is a type of cement manufactured by grinding clinker, gypsum and Pozzolanic materials in a specific proportion. The Pozzolanic material includes fly ash, volcanic ash, calcined clay etc.

  • 17)Why is PPC called as 33 grade cement?

    PPC has 28 days compressive strength of 33MPa

  • 18)What is the difference between OPC 43 and 53 Grade?

    • OPC 43 grade has 28 days compressive strength of 43MPa
    • OPC 53 grade has 28 days compressive strength of 53MPa

  • 19)Which Cement is better for constructing houses and other commercial building?

    • Both OPC and PPC are eco friendly materials but Pozzolana Cement is made of natural and industrial waste. OPC is available in 3 grades as Grade 33, 43, 53 and Pozzolana is available in only one grade and its strength is equal to the strength of Grade 33 of OPC.
    • PPC produces highly durable concrete as it has low water permeability compared to OPC. PPC has low strength compared to OPC but hardens over a while with proper curing. And PPC is cheaper when compared to OPC.
    • PPC is highly resistant to sulfate attacks and thus it has its applications in mass concrete work like dams, foundations and buildings near the seashore, reservoirs and in other marine works. OPC is highly applicable where a fast pace of construction is required. It cannot be used for mass concreting as it has a faster heat of hydration.

  • 20)What are the advantages of PPC?

    • Compressive strength & Rate of Strength Gain
    • Bond of concrete to steel.
    • Low heat of Hydration
    • Reduced Shrinkage
    • Permeability

  • 21)What are the advantages of OPC?

    • It has high initial setting strength
    • Improved workability and reduced water cement ratio
    • Fast earlier strength development
    • Low chloride content prevents corrosion
    • Improved bondage of concrete to steel

  • 22)Where is OPC used?

    OPC is widely used for the construction of high rise buildings, roads, dams, and bridges, flyovers where high strength and fast setting are required.

  • 23)Where is PPC used?

    PPC is believed to be a future product considering its environments friendly. They are suitable to use in hostile environmental conditions and are corrosion resistant. They can be reliably utilized in the construction of marine structures, masonry mortars and plastering, hydraulic structures. Besides, they are popularly used in mass concreting works, such as dykes, sewage pipes, dams, etc. PPC is also employed in all applications where OPC is also used.

  • 24)Does cement having lesser initial setting time mean better quality?

    No, it is not correct. Cement having lesser setting time can be obtained by increasing finesse of the cement / increasing the Alumina content in the cement. With this kind of cement, construction work can be accelerated. But, at the same time, it requires more water-curing or else cracks will be developed. As far as strength is concerned, low setting time has no relevance.

  • 1)சிமெண்ட் என்றால் என்ன?

    சிமெண்ட் என்பது ஒரு ஹைட்ராலிக் பைண்டர்.  இது கால்சியத்தின் சிலிக்கேட்டுகள் மற்றும் அலுமினேட்களைக் கொண்ட,  நுண்தூளாக அரைக்கப்பட்ட கனிம பொருள். தண்ணீருடன் கலக்கும் போது, இது பசையாகி, ஹைட்ராலிக் வினையின் மூலமாக இறுகி  கடினப்படுகிறது. 

  • 2)சிமெண்ட் தயாரிக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் எவை?

    சுண்ணாம்புக்கல், களிமண், இரும்பு தாது மற்றும் ஜிப்சம்

  • 3)சிமெண்ட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

    சிமெண்ட் தரமுடைய சுண்ணாம்புக்கல், கிரஷரில் சிறிய அளவுகளில் (75 mm க்கு குறைவாக) நொறுக்கப்படுகிறது. அப்படி நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக் கல் ரா மில்லில் நன்கு பொடியாக  அரைக்கப்படுகிறது, இது ரா மீல் என்று அழைக்கப்படுகிறது. ரா மீல் சுழலும் சூளையின் நுழைவாயிலில் செலுத்தப்படுகிறது. கோல் மில்லில் இருந்து தூள் தூளாக்கப்பட்ட நிலக்கரி சூளையின் வெளி வாயிலில் உட்செலுத்தப்பட்டு எரிக்கப்படுகிறது. 1400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் , கிளிங்கர் உற்பத்தியாகிறது. சூளையில் இருந்து வெளியேறும் இந்த கிளிங்கர், ஜிப்சம் மற்றும் சாம்பலை விகிதாச்சார விகிதத்தில்  சேர்க்கப்பட்டு சிமெண்ட் மில்லில் நுண்தூளாக அரைக்கப்படுவதே சிமெண்ட் என அழைக்கப்படுகிறது. 

  • 4)கிளிங்கர் என்றால் என்ன?

    கிளிங்கர் என்பது 1400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிமெண்ட் தர சுண்ணாம்புக் கல் உருகுவதன் மூலம் பெறப்பட்ட 3 முதல் 25 மிமீ விட்டம் கொண்ட கோள உருண்டையான சிறுமணிப் பொருளாகும். சிமெண்ட் தயாரிப்பில் இது ஒரு இடைநிலைப் பொருளாகும்.

  • 5)ஜிப்சம்மின் செயல்பாடு என்ன?

    சிமெண்ட் இறுகும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு மென்மையான கனிம பொருளாக ஜிப்சம் செயல்படுகிறது.

  • 6)சந்தையில் என்னென்ன சிமெண்ட் வகைகள் கிடைக்கின்றன?

    போர்ட்லேண்ட் பொசோலனா சிமெண்ட் (பிபிசி), ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட் (ஓபிசி)-43 கிரேடு மற்றும் ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமெண்ட் (ஓபிசி)-53 கிரேடு ஆகியவை பொதுவாகக் கிடைக்கும் சிமெண்ட் வகைகளாகும்.

  • 7)சிமெண்ட் இறுகும் தன்மை (செட்டிங்) என்றால் என்ன?

    சிமெண்ட் இறுகும் தன்மை (செட்டிங்)  என்பது சிமெண்ட் பேஸ்ட்டின் விறைப்பு தன்மையாகும். இது அதன் திரவ நிலையில் இருந்து திடமான நிலைக்கு மாறுவதை பரவலாக குறிப்பிடுகிறது. 

  • 8)சிமெண்ட் கடினப்படுதல் என்றால் என்ன?

    சிமெண்ட் கடினப்படுதல் என்பது ஒரு இறுகிய சிமெண்ட் பேஸ்ட், அதன்  வலிமையைப் பெறும் செயல்முறையாகும். 

  • 9)கான்கிரீட்டிற்கான சிமெண்ட் மெதுவாக இறுகுவதற்கும், விரைவாக இறுகுவதற்கும் உள்ள காரணங்கள் என்ன?

    மெதுவான அமைப்புக்கு காரணம்:

    • நீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் இரசாயனங்கள், மணல் மற்றும் ஜல்லி 
    • குறைந்த சிமெண்ட் கலவை/கான்கிரீட் பயன்பாடுகள். 
    • குளிர் காலநிலை.
    • பொதுவாக கலப்படம் செய்யப்பட்ட சிமெண்டில் அதிக அளவில் காணப்படுகின்ற அசுத்தங்கள்.
    • அதிக நீர் சிமெண்ட் விகிதம்.

    விரைவாக இறுகுவதற்கு காரணங்கள்: 

    • குறைந்த அளவு ஜிப்சம் சேர்த்தல்.
    • வெப்பமான காலநிலை. 
    • சிமெண்டின்உயர் நுண்துகள் தன்மை.

  • 10)கான்கிரீட்டிற்கு தண்ணீர் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

    பிணைப்பு பண்புடன் ஒரு ஜெல்லை உருவாக்குவதற்கும் அது மணல் மற்றும் ஜல்லியுடன் ஒரே மாதிரியாக கலக்கப்படுவதற்கும், சிமெண்ட் தண்ணீருடன் நீரேற்றத்தின் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது, இருப்பினும், அதிக அளவு தண்ணீர்  கான்கிரீட்டைத் தடுக்கும் என்பதால், தேவையான நிலைத்தன்மைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் தான் தண்ணீர் சேர்க்கப்பட வேண்டும். 

  • 11)எந்த வகையான தண்ணீரையும் கான்கிரீட்டிற்கு பயன்படுத்த முடியுமா?

    கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் நீர் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும், பொதுவாக பருகக்கூடிய தரத்தில் இருந்தால் மிகவும் நல்லது. ஆழ்துளை நீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் இது பெரும்பாலும் இறுகும்  நேரத்தை பாதிப்பதோடு, கான்கிரீட்டின் வலிமையைக் குறைக்கும் அசுத்தங்களைக் கொண்டுள்ளது. கடல் நீர் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டிற்கு ஏற்றதல்ல, ஏனெனில் அது அரிப்பை ஏற்படுத்தும். 

  • 12)நீர்-சிமெண்ட் விகிதச்சாரம் என்றால் என்ன?

    ஒரு யூனிட் அளவுக்கான கான்கிரீட்டை கலக்குவதற்கு தேவைப்படும் நீரின் அளவிற்கும்  சிமெண்டின் அளவிற்கும் உள்ள விகிதச்சாரம், நீர்-சிமெண்ட் விகிதச்சாரம் எனப்படுகிறது.

  • 13)நீராற்றுதல் (Curing) என்றால் என்ன?

    சிமெண்ட்டை கடினமாக்குவது நீராற்றுதலின்(Curing) பொறுப்பு. நீராற்றுதலுக்கான மிகவும் பொதுவான முறை கான்கிரீட் மீது தண்ணீரை ஊற்றுவது அல்லது தெளிப்பதாகும்.

  • 14)கான்கிரீட்டின் தரத்தை பாதிக்கும் பொதுவான தவறுகள் யாவை?

    • கலவைக்கு அதிக அல்லது மிகக் குறைந்த அளவில் தண்ணீரைப் பயன்படுத்துதல்.
    • சிமெண்டுடன் மணல் மற்றும் ஜெல்லியை  முறையற்ற  வகையில் கலக்குதல் 
    • போதுமானதற்ற கான்க்ரீட் சுருக்கம் 
    • சரியாக நனைக்காத   காய்ந்த அடித்தளத்தில் கான்கிரீட் போடுவது 
    • திடப்பொருட்கள், இரசாயனங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நீரின் பயன்பாடு முடிக்கப்பட்ட கான்கிரீட் மேற்பரப்பை நீராற்றாமல்(Curing)முதல் பத்து நாட்கள் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று படும்படி விட்டுவிடுவது. 

  • 15)சிமெண்ட் நிறம் அதன் தரத்தை பாதிக்கிறதா?

    சிமெண்ட் நிறம் அதன் பண்புகளில் எந்தவிதமான விளைவையும் ஏற்படுத்தாது.

  • 16)PPC சிமெண்ட் என்றால் என்ன?

    PPC (Portland Pozzolana Cement) என்பது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கிளிங்கர், ஜிப்சம் மற்றும் Pozzolanic பொருட்களை அரைத்து தயாரிக்கப்படும் ஒரு வகை சிமெண்ட் ஆகும். Pozzolanic பொருளில் சாம்பல், எரிமலை சாம்பல், சுட்ட களிமண் போன்றவை அடங்கும்.

  • 17)PPC எதற்காக 33 கிரேடு சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது?

    PPC,  33 மெகாபாஸ்கல் 28 நாட்கள் அமுக்கு வலிமையைக் கொண்டிருப்பதால், அது 33 கிரேடு சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது

  • 18)OPC 43 மற்றும் 53 கிரேடுகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?

    • OPC 43 கிரேடு, 43 மெகாபாஸ்கல் 28 நாட்கள் அமுக்கு வலிமையைக் கொண்டது.
    • OPC 53 கிரேடு, 53 மெகாபாஸ்கல் 28 நாட்கள் அமுக்கு வலிமையைக் கொண்டது.

  • 19)குடியிருப்புகள் மற்றும் பிற வணிக வளாகங்கள் கட்டுவதற்கு எந்தவிதமான சிமெண்ட் சிறந்தது?

    • OPC மற்றும் PPC இரண்டும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களாகும் ஆனால் Pozzolana சிமெண்ட் இயற்கை மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் உருவானது. OPC வகை சிமெண்ட் 33, 43 , 53 என 3 கிரேடுகளில் கிடைக்கிறது மற்றும் PPC ஒரு கிரேடில் மட்டுமே கிடைக்கிறது.  அதன் வலிமை OPC கிரேடு 33யின் வலிமைக்கு சமம்.
    • OPC உடன் ஒப்பிடும்போது, குறைந்த நீர் ஊடுருவக்கூடிய தன்மையைக் கொண்டிருப்பதால் PPC அதிக நீடித்த கான்கிரீட்டை உற்பத்தி செய்கிறது. OPC உடன் ஒப்பிடும்போது PPC குறைந்த வலிமையைக் கொண்டுள்ளது, ஆனால் சரியான நீராற்றுதல் (Curing)மூலம் சிறிது நேரத்தில் கடினமாகிறது.OPC உடன் ஒப்பிடும்போது PPC மலிவானதாகும். 
    • PPC சல்பேட் தாக்குதல்களை தாங்கக்கூடிய அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. இவ்வாறு இது அணைகள், அடித்தளங்கள் மற்றும் கடற்கரைக்கு அருகிலுள்ள கட்டிடங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற கடல் சார்ந்த வேலைப்பாடுகள் போன்ற பெருவாரியான கான்கிரீட் வேலைகளில் அதன் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. வேகமான கட்டுமானம் தேவைப்படும் இடங்களில் OPC வகை மிகவும் பொருத்தமானதாகும். வேகமான வெப்ப நீரேற்றத்தைக் கொண்டிருப்பதால், பெருவாரியான கான்கிரீட்டிற்கு இதைப் பயன்படுத்த முடியாது. 

  • 20)PPCயின் நன்மைகள் என்ன?

    • அமுக்கு வலிமை மற்றும் வலிமை விகிதம் பெறுதல்
    • எஃகு கான்கிரீட் பிணைப்பு.
    • குறைந்த வெப்ப நீரேற்றம்
    • குறைந்த சுருக்கம்
    • ஊடுருவக்கூடிய தன்மை

  • 21)OPCயின் நன்மைகள் யாவை?

    • இது அதிக ஆரம்ப இறுகும் வலிமையைக் கொண்டுள்ளது 
    • மேம்படுத்தப்பட்ட வேலைத்திறன் மற்றும் குறைக்கப்பட்ட நீர்
    • முந்தைய வலிமையின் வேக வளர்ச்சி 
    • குறைந்த குளோரைடு உள்ளடக்கம் அரிப்பைத் தடுக்கிறது 
    • மேம்படுத்தப்பட்ட எஃகு கான்கிரீட் பிணைப்பு

  • 22)OPC எங்கே பயன்படுத்தப்படுகிறது?

    அதிக வலிமை மற்றும் வேகமான  இறுகும் தன்மை தேவைப்படும், உயரமான கட்டிடங்கள், சாலைகள், அணைகள் மற்றும் பாலங்கள், மேம்பாலங்கள் ஆகிய கட்டுமானங்களுக்கு OPC பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 

  • 23)PPC எங்கே பயன்படுத்தப்படுகிறது?

    PPC சுற்றுச்சூழலுக்கு தகுந்தபடி இருப்பதால் இது ஒரு எதிர்காலத்திற்கான தயாரிப்பு என்று நம்பப்படுகிறது. அவை எதிர்மறையான சுற்றுச்சூழல் நிலைமைகளில் பயன்படுத்த ஏற்றது மற்றும் அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டது. கடல் சார்ந்த கட்டமைப்புகள், கட்டுமானத்திற்கான மென்காரை மற்றும் ப்ளாஸ்டெரிங், ஹைட்ராலிக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் கட்டுமானத்தில் இதை  நம்பத்தகுந்த வகையில் பயன்படுத்தப்படலாம். தவிர, அணைக்கரைகள், கழிவுநீர் குழாய்கள், அணைகள் போன்ற பெருவாரியான கான்கிரீட் வேலைகளில் இது  பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன. OPC பயன்படுத்தப்படும் அனைத்து பயன்பாடுகளிலும் PPC பயன்படுத்தப்படுகிறது.

  • 24)குறைந்த ஆரம்ப இறுகும் நேரத்தைக் கொண்டிருக்கும் சிமெண்ட் சிறந்த தரத்தைக் குறிக்குமா?

    இல்லை, அது சரியல்ல. சிமெண்டின் நுணுக்கத்தை அதிகரிப்பதன் மூலமும் / சிமெண்டில் உள்ள அலுமினா உள்ளடக்கத்தை அதிகரிப்பதன் மூலமும் குறைவான செட்டிங் நேரத்தைக் கொண்ட சிமெண்டைப் பெறலாம்.  இந்த வகையான சிமெண்ட் மூலம், கட்டுமான பணியை துரிதப்படுத்தலாம். ஆனால், அதே நேரத்தில், அதற்கு அதிக நீராற்றுதல் (Curing)தேவைப்படுகிறது, இல்லையெனில் விரிசல் உருவாகும். வலிமையைப் பொறுத்த வரையில், குறைந்த இறுகும் நேரத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 

Disclaimer:

It is informed that the FAQ has been prepared by the office of TANCEM. The FAQ is only illustrative and for information only.

பொறுப்புத் துறப்பு:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் TANCEM அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விளக்கமானவை மற்றும் தகவலுக்காக மட்டுமே.

Get in touch with us

Send us your feedback, queries and questions. We will get back to you shortly

(/300)
Loading
Your message has been sent. Thank you!

தமிழ்English